அன்றோ சிறை பட்டு
கிடந்தது
சின்ன உள்ளம் ………. !!
ஜன்னல் கம்பிகளில்
மழை ரசித்தோம் !!
பூக்களின் மொழி
சுவாசித்திருந்தோம் !!
காற்றது தலை
கோத சிலீர்த்தோம் !!!
வானவில் வர்ணம்
கண்டு
மகிழ்ந்திருந்தோம் !!
இசையோடு
தவழ்ந்திருந்தோம் !!
வானத்தின் எல்லைகளை
வியந்திருந்தோம் !!!
இன்றோ
கூடு விட்டு
கூண்டு
துறந்தோம் !!
சுயமாய் சுவாசிக்க
நேசிக்க
சம்பாதிக்க
கற்றோம் !!!
ஆனால் ஏனோ
வானவில் தெரிகிறது
வர்ணங்கள் அற்று ??
காற்றது தவழ்கிறது
ஈரம் அற்று ??
மரங்களின் நேசிப்பெல்லாம்
விளம்பர பலகைகளில்
பேச மட்டுமே??
இசை அது
காது தழுவ
கேட்ககாலமில்லை ???
கூண்டில் அடைபட்ட
கணங்களில்
சுவைத்திருந்தோம் !!!
சுதந்திரம் தேடி வந்து
சிறை புகுந்தோம்!!!
வாரம் இரு நாள்
வர்ணம் காண எண்ணி
கனவில் தொலைந்து கொண்டிருக்கிறோம்!!!!
——இந்திரா
No comments:
Post a Comment